கடவுளே இல்லை என்று
நலமாய் நாத்திகம் பேசினாய்
நாத்திகம் உன்னில் வளர்த்தது
பகுத்தறிவை இல்லை
பலவீனத்தை
பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான் -அவன்
கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
என்றான் கண்ணதாசன்
அவனும் நாத்திகவாதியே
அவன் பாசத்தையும் கருணையையும்
உணர்ந்ததினால் ஆத்திகவாதியானான்
நீ இன்னும் பகுத்தறிவுவாதியாக இருப்பதினால்
பாசமும் கருணையும் உன்னில் இல்லாது போயிற்றோ


நீ இன்னும் பகுத்தறிவுவாதியாக இருப்பதினால்
ReplyDeleteபாசமும் கருணையும்-------------undu eppothum,..............
நன்றி தமிழ்
ReplyDelete