Friday, 30 November 2012

உருவில்லாத கனவுகள்



காகிதம் எடுத்து கைகளால் கிறுக்கினேன்

கவிதைகள் எழுத வார்த்தைகள் தேடினேன்

எதை எழுதவென்று  தெரியாமல் நின்றேன்

உன்னோடு பேச வழியும் இல்லை

என்னோடு பேச உன் விழியும் இல்லை

உன் அருகில் இருக்கும் நேரத்தை தொலைத்தேன்

என் அருகில் இருக்கும் தூரத்தை அளந்தேன்

உன்னை பார்க்க தோன்றும் தவிப்பை நீ அறிய வில்லை 

அந்த ஆசையை தவிர்க்க என்னாலும் இயலவில்லை  

நீ என் கவிதைகளை வாசிக்கிராயோ தெரியவில்லை

ஆனால் என் கவிதைகளால் வாசிக்கபடுகிறாய்

எங்கோ இருக்கும் உன் இதயம் தினம் தினம்

என் கனவுகளுக்கு இதமான ஒத்தடம்

இரவினில் கூட உன் நினைவுகளில் கனவுகள்

காலையில் கண்விழிக்கும் முன் கனவுடன் கலைந்தும் போகிறாய்

தொலைத்துவிட்டாய் உன்னுள் தேடவிட்டாய் என்னுள்

கவிதை என்று நினைத்து கிறுக்கல்களாகி முடிந்து

ருவிலாது போனது என் கனவுகளை போல



8 comments:

  1. நீ என் கவிதைகளை வாசிக்கிராயோ தெரியவில்லை ஆனால் நீ என் கவிதைகளால் வாசிக்கப்படுகிறாய் " என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது ஒரு தலை காதல் மிகுந்த உணர்சிகளை கொடுத்து காதல் உற்றவரை ஆட்டிவைக்கும் ,அற்றவரை அசர வைக்கும்

    மனம் நிலையில்லாது போனால் வார்த்தைகள் உருப்பெற வழிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் தங்களின் கவிதை எல்லோர் மனதிலும் நிலை பெரும் வாழ்த்துக்கள் ,தங்களின் கவிதை பயணம் தொடரட்டும் \

    ReplyDelete
  2. நன்றி நவநீத குருக்கள் உங்கள் கருத்து மற்றும் வாழ்த்துகளுக்கு கவிதைகள் வெறும் வார்த்தை ஜாலம் அல்லாது வேறு ஒன்றும் இல்லை

    ReplyDelete
  3. Wonderful Bhaskar..nalla anubhavuchu ezhuthi irukkeenga..:)

    ReplyDelete
    Replies
    1. thanks...lalli..illa karbanikalum undu...

      Delete
  4. 4,5,6,7, வரிகள் அ.ரு.மை. உங்களை கவனிக்க வைக்க இந்த வரிகளை முடிந்தால் ஸ்டேடசாகப் போடலாம். சூப்பர் தம்பி..! ஹன்ஸா காஷ்யப்.

    ReplyDelete
  5. நன்றி ஹன்ஸா காஷ்யப்.உங்கள் விமர்சனங்களுக்கு ஆனால் எனக்கு கவிதை என்னும் நிறைய வசம் வரவில்லை வரும்போது கட்டாயம் status ல் எழுதவேண்டும் ...நன்றி ..

    ReplyDelete
  6. //நீ என் கவிதைகளை வாசிக்கிராயோ தெரியவில்லை

    ஆனால் என் கவிதைகளால் வாசிக்கபடுகிறாய்// super pa

    ReplyDelete
  7. நன்றி தமிழ் உங்கள் வருகைக்கு

    ReplyDelete