Monday, 22 October 2012

தாவணி கனவுகள்



கதிரவனின் வருகையின் முன்
காலை துயில் கலைத்து
ஈர குழல் முடிந்து முற்றம் பெருக்கி
வாயில் படியில்  தீபம் ஏற்றி

பூஜை அறையில் பூக்கள் சூடி
பின் தொழுது
நீல தாவணி சூடி பள்ளி செல்லும்
பைங்கிளியோ என்னும் அழகு

மாலையிலே மாமரத்தின் அருகில்
மயக்கத்துடன் உன்வரவுகாய் நானும்
மஞ்சள் வெயிலில் தங்கமென ஜொலித்து
என் அருகில் ஸ்வரங்களின் கூட்டு சேர்க்கையாய் நீயும்

பாட புதகத்தினோடு நீ 
காதல் அத்தியாயங்களோடு நான்
பரிமாறிய நினைவுகள் 

பதிவானவை பாதி முடிவாகதவை மீதி
அசைபோடுவோம்
அடுத்த ஜென்மம் வரை ...

2 comments:

  1. //பதிவானவை பாதி முடிவாகதவை மீதி
    அசைபோடுவோம்
    அடுத்த ஜென்மம் வரை ...// nice ma

    ReplyDelete
  2. உங்கள் பார்வைக்கு நன்றி தமிழ்

    ReplyDelete