புலர்ந்தும் புலராத காலை பொழுதில்
உன்னை காண ஓடிவந்த காலங்கள்
யாவும் மறக்க முடியாமல் கனவுகளில்
விழிகளில் மட்டும் ஓர்மையில்
இருள் சூழ்ந்த இரயில் வண்டி கூட
உன்பகை கொண்டதால் புகை சூழ்ந்து
சிவப்பு விளக்கை எனக்காய் இட்டு
பச்சை விளக்கோடு பாசமில்லாது போனதே
இடைவெளி இல்லாது ஒலித்த
அலைபேசி கூட
அன்பே உன்அழைப்பு இல்லாமல்
அன்பே உன்அழைப்பு இல்லாமல்
அலங்கோலமாகி போனதே
உணர்வில்லா உறிஞ்சல்களுடன்
சுவையான காபி கூட
உன் அருகாமை இல்லாது
சுவை இல்லாது போனதே
உன் அருகாமை இல்லாது
சுவை இல்லாது போனதே
நிறைவான வாதங்களுடன்
அறை முழுவதும் நின்ற விவாதங்கள் யாவும்
சிறையாகி போனதே எனி அது
பிறையாகி வளர்வது என்னாளோ
கடந்த கால நினைவுகள் எல்லாம்
கல்லறையினுள் தூங்கினாலும்
கலங்காது வந்து செல்வேன்
காதல் என்னுள் தூங்காது இருக்கும் வரை


.gif)
nice ma
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி தமிழ் ..
Delete//புலர்ந்தும் புலராத காலை பொழுதில்
ReplyDeleteஉன்னை காண ஓடிவந்த காலங்கள்
யாவும் மறக்க முடியாமல் கனவுகளில் //
//ஓர்மையில் மட்டுமே விழிகளில்// ..................nice pa
நன்றி தமிழ் உங்கள் கருத்துக்களுக்கு ...
Deleteaaha enna oru arputhamana varigal Bhaskar...
ReplyDeleteகடந்த கால நினைவுகள் எல்லாம்
கல்லறையினுள் தூங்கினாலும்
கலங்காது வந்து செல்வேன்
காதல் என்னுள் தூங்காது இருக்கும் வரை...!!!
நன்றி லலிதா ...உங்கள் பாராட்டுக்களுக்கு எனியும் அருமையாக எழுத வேண்டும் ...என்ற உற்சாகம் வருகிறது
Delete