Friday, 31 August 2012

நினைவுகள்


தூங்கினாலும்
தூங்கா உன் நினைவுகள்


ஒன்றாய் அமர்ந்த இடங்கள்
காலையில்
படிக்கட்டுகளில்
இனிமையான சுவையுடன்
மங்காத நினைவுகள்


உணவருந்தும் போது
விவாதங்களில் உன் நினைவுகள்


அருகில் அமர்ந்து
அன்பை பரிமாரி 
நினைவுகளை பகிர்ந்து கொண்டபோதும்
உன் நினைவுகள்


சின்ன சின்ன சண்டைகள்
ஆறிய காயங்கள் ஆறாத நினைவுகள்


துயிலும் போது
என் அரவணைப்பில் உன்
நினைவுகள்


எல்லவற்றிர்கும் நான் இருக்கிறேன்
என்னவள் என்னையே
நீங்கி சென்றாள்
விளக்கம் சொல்ல அவளுக்கு
ஒருகாரணம் நான் விலக வேண்டும் என்பது
நிஜமான நினைவுகள்


இவை அனைத்தும் நீங்காத
நினைவுகளாய் நெஞ்சோரம்
தோன்றும் போது விழியோரம்
நீர் துளி அதனுள் உன் உருவம்


மறந்து போய்விட்ட உனக்கு
மறக்காத நினைவுகளாய் என்னுள்
உன் நினைவுகள் ..... 

No comments:

Post a Comment