Saturday, 25 August 2012

இணை புறாக்கள்


இணையாய் திரிந்த
இரு புறாக்கள்
இருவேறு திக்குகளில்

இரவின் அழைப்பில்
இதமாய் உறங்கிய மனதுகள்
இரு வேறுபட்டு சென்றன

அன்பு பூத்த மனங்களில்
அரளி பூத்து இடராய் போனது

சிறகடித்து பறந்த
இதய  புறாக்களிலிரூந்து  
வீணாய் பிரிந்த
இறகுகள் போல
இனிமையான நினைவுகள்
வீணற்று போனது

இன்ப மழையில் நனைந்தும்
குளிரில் அணைத்தும்
சூட்டில் இணைத்தும்
இருந்த நினைவுகள்
மனதில் உருகிபோகின்றது 

ஒன்றாய்  முழங்கிய வசந்த
சங்கின் நாதம்
உடைந்து போய்
சிதைந்த நாதத்தில்
வேதனை தேறிக்கின்றது

மலையின் அடிவாரத்தில்
மங்கிய நிலாவில்
மஞ்சத்தில் கூடி நின்ற 
நினைவுகள் எல்லாம்
கண்ணீரால் அழிந்து போனதோ
எனி இணை புறாக்கள்
ஒன்று சேருமோ ?  

 

No comments:

Post a Comment