Monday, 27 August 2012

கூட்டு கிளி ....

அன்பெனும் காட்டில்
அழகான இரு சிறுகிளிகள்............

அடுத்தடுத்த கூட்டில்
ஒரே காட்டில்.............

கூடி மகிழ்ந்த
கூட்டினை
கூடாமல் போனது
ஜோடி கிளி...............

அதன் மீது
குற்றமில்லை
கூட்டினுள்
குழப்பத்தில் தடுமாறிய
ஜோடிகிளி.................

சிந்தை எல்லாம்
சிந்தனையாய்
மறைந்து போனது
ஜோடிகிளி................

நினைவுகள் ஊஞ்சல் ஆட
நிலை தடுமாறிய கூட்டு கிளி..........



கூட்டாய் வந்தது ஜோடிகிளியின்
அன்பில் வீட்டுகிளி.............


பின்னில் வந்து
கண்ணை மூடி
கழியாட நினைத்த
கூட்டு கிளி.............

தவறாக எண்ணிய
வீட்டு கிளி
சிறு உரசல்கள்
சிறு தீயாய்..............

கூடு பற்றி எரிய
அதனுள் இருகிளிகள்
பேசா கிளி பேசி
மறைந்தது..........

தான் கூட்டிய
தீயில் வழியறியாது
கூட்டு கிளி............

வீட்டு கிளியின்
வருகையில்
தீயாய் உருகி
தபசில்........


No comments:

Post a Comment