Sunday, 26 August 2012

காத்திருப்பேன் கனவுகளுடன்...


நீ என் அருகில்

இல்லை என்றாலும்
உன் இதய துடிப்பு என்னுள்

காதலின் துடிப்போ

கனலின் வெம்மையோ
அறியமுடியவில்லை

நீ எனக்கு மட்டும்

நம் உணர்வுகள்
நமக்கு மட்டும்

வேரிலும் காயிலும் பூவிலும்

வலம்வரும் எறும்பு போல்
உன் அன்பு முழுவதும்
எனக்கு மட்டும்

அதில் காயம் பட்டது என்று

வேரோடு உன்னை அழித்தாய்
நானும் அழிந்தேன்

அறிந்து கொண்டு செய்யாமல்

அன்பு கொண்டு செய்த
தவறுகள் உன்னால் ஏன்
தெரிந்துகொள்ள முடியவில்லை





என்னில் உன்னை தேடவிட்டு

எங்கே சென்று மறைந்தாய்

எங்கிருந்தாலும் உன்

நினைவுகளின் எச்சமாய்
கனவுகளின் மிச்சமாய்
காத்திருப்பேன் கனவுகளுடன்...

 

2 comments: