மீண்டும் பிறக்க ஆசை
ஒரு வினாடி
தாமதத்தின் அருமை
இரயிலை தவற
விட்டவனுக்குதான்
தெரியும்
ஒரு வருஷ
தாமதத்தின் அருமை
பரீட்சையில் தோற்று
போனவனுக்குதான்
தெரியும்
உன்னை கைபிடிக்க
நான் எடுத்த தாமதம்
இந்த ஜென்மத்தில்
உன்னை இழந்த
எனக்குதான் தெரியும்
ஆகையால் மீண்டும்
பிறக்க ஆசை
மறுபடியும் உன்னுடன்
தாமதமில்லாத
பயணங்களுடன்
//உன்னை கைபிடிக்க நான் எடுத்த தாமதம்
ReplyDeleteஇந்த ஜென்மத்தில் உன்னை இழந்த எனக்குதான் தெரியும் //
//மீண்டும் பிறக்க ஆசை
மறுபடியும் உன்னுடன் தாமதமில்லாத தடங்கல்களுடன் //
nice ma..
நன்றி தமிழ்
ReplyDeleteநான் பயந்துட்டேன் இந்த படத்தைப்பார்த்துவிட்டு...
ReplyDeleteகவிதை டச்சிங்
ஓ.. கடைசியில் படத்தில் இருக்கும் ஓவியம் சிரிக்கும் போது நீங்கள் அழுது விடீர்களா ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி ..
ReplyDeleteநன்று..உங்கள் வருகை அடிகடி பதிவாகட்டும் ..