Wednesday, 3 October 2012

உனக்காய் காத்திருப்பில்






உன் உருவத்தை மட்டும் பார்த்த கண்கள்   
இன்று கண்ணீரை நிறைத்து நிற்கின்றன 

உன் பேச்சை மட்டுமே கேட்டு கொண்டிருந்த 
என் செவிகள் கேளாமல் போய்விட்டன 

உன்பெயரை மட்டுமே சொல்லி கொண்டிருந்த 
இதழ்கள் ஊமையாகி போய் விட்டன 

நீ இல்லாத அருகாமை அறியாது
என் விரக தாபங்கள் ராகமாய் தாளமாய்
நிலவில்லா வானத்தில் வெளிச்சத்தை தேடுகின்றன  

தளர்ந்து போன மனதிற்கு மட்டுமே தெரியும் 
நிறைந்து போன கண்களில் நீர் எதற்கென்று

எனி ஒரு தருணத்தில் காண நேரும் போது
ஓர விழியில் கண்ணீரும் இதழில் புன் சிரிப்பும் 
வேண்டும் என்று உனக்காய் காத்திருப்பில்

2 comments:

  1. //எனி ஒரு தருணத்தில் காண நேரும் போது
    ஓர விழியில் கண்ணீரும் இதழில் புன் சிரிப்பும்
    வேண்டும் என்று உனக்காய் காத்திருப்பில்// nice ma

    ReplyDelete
  2. காண நேரும்போது நீண்ட கால தவிப்புகள் அரங்கேறுமோ இல்லை காணாது எல்லாம் அழிந்து போகுமோ....
    உங்கள் வரவுக்கு நன்றி தமிழ்

    ReplyDelete