Monday, 29 October 2012

நடை பயணம்



வேண்டும் என்ற நினைவோடு 
வெறுமையாய் இருந்த 
மனதோடு தேடலாய்
ஒரு நடை பயணம் 

வெறுமையை நீக்கிவிட்டு
வேராய் நீ நுழைந்த போது 
சுகமான நினைவுகளுடன் 
ஒரு நடை பயணம் 
 
சுகமான நினைவுகள் 
சுமையாகி போன போது
இணகங்கள் பிணக்குகளாகி 
பிரிவுகளுடன் ஒரு நடை பயணம் 

பிரிவுகள் நினைவுகளாகி 
நினைவுகள் ஏக்கங்களாகி 
ஏக்கங்கள் காதிருப்புகளோடு
ஒரு நடை பயணம் 

பயணித்து பயணித்து 
பாலைவனம் தாண்டி 
சோலை வனம் சென்று 
சுகமாய் இருப்பேனா இல்லை 


கால் தேய நடந்து நடந்து 
கால ஓட்டத்தில் காணமல் போய் விடுவேனா 
காரிகையே உனக்குத்தான் தெரியும் 
என் பயணத்தின் நிறைவு 



7 comments:

  1. Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி அகிலா

      Delete
  2. கால் தேய நடந்து நடந்து
    கால ஓட்டத்தில் காணமல் போய் விடுவேனா

    ReplyDelete
  3. நன்றி தமிழ்

    ReplyDelete
  4. நன்றி ஜீவா

    ReplyDelete