கதிரவனின் வருகையின் முன்
காலை துயில் கலைத்து
ஈர குழல் முடிந்து முற்றம் பெருக்கி
வாயில் படியில் தீபம் ஏற்றி
பூஜை அறையில் பூக்கள் சூடி
பின் தொழுது
நீல தாவணி சூடி பள்ளி செல்லும்
பைங்கிளியோ என்னும் அழகு
மாலையிலே மாமரத்தின் அருகில்
மயக்கத்துடன் உன்வரவுகாய் நானும்
மஞ்சள் வெயிலில் தங்கமென ஜொலித்து
என் அருகில் ஸ்வரங்களின் கூட்டு சேர்க்கையாய் நீயும்
பாட புதகத்தினோடு நீ
காதல் அத்தியாயங்களோடு நான்
பரிமாறிய நினைவுகள்
பதிவானவை பாதி முடிவாகதவை மீதி
அசைபோடுவோம்
அடுத்த ஜென்மம் வரை ...

//பதிவானவை பாதி முடிவாகதவை மீதி
ReplyDeleteஅசைபோடுவோம்
அடுத்த ஜென்மம் வரை ...// nice ma
உங்கள் பார்வைக்கு நன்றி தமிழ்
ReplyDelete