Tuesday, 16 October 2012

ஏன் மனமே...



சுகமாய் நினைத்து 
சுமந்த மனது 
சுமையாய் நினைத்து 
சூன்யமாக்கிய பிறகு 
சுயம் கெட்டு ஏன் 
சுற்றி சுற்றி வருகிறாய் மனமே

நினைவுகள் எல்லாம்
நீர்த்து நிர்மூலமானபிறகு
நீ மட்டும் நீங்காமல் நிற்கிறாய்
ஏன் மனமே....
  
வேண்டாம் என்று
வெற்றிடமாக்க பட்டு 
வெறுமையாகி போனபோதும் 
வேண்டும் என்று ஏன்
வீழ்ந்து கிடக்கிறாய் மனமே

வென்று விட்டதாய் 
வீறு கொண்டு  
வெறுமையான உறுதிகொண்டு
வலுவிலாமல் போன பிறகு 
வலியே ஏன் செல்கிறாய் மனமே  

காத்திருப்புகள் எல்லாம்
கானல் நீராகி போனபிறகு
காலத்தினோடு கலவரம் 
செய்கிறாய் ஏன்  மனமே.. 

பார்வைகள் எல்லாம்
பழுதாகி போனபிறகு
பாதையே இல்லாத வழியில்
பாசத்தோடு ஏன் நிற்கிறாய் மனமே...

வழி அறியா பாதையில் 
வழிதடம் அழிந்து 
வழி தெரியாது நிற்கையில் 
வராத ஊருக்கு வழி தேடுகிறாய் 
ஏன் மனமே...





2 comments: