இன்று எண்ணி பார்கிறேன்
என்னுள் பசுமையாய் உன்னை
உன்னை முதன் முதலில் நான் சந்தித்தபோது
உன் ஓரவிழி பார்வையும்
பாசமிகு பேச்சும்
நர்த்தனமாடும் கண்களும்
நளினமான உன் இதழ்களும்
என்னை மயங்க செய்ததென்னவோ உண்மைதான்..
.
நீ காட்டிய பரிவும் பாசமும்
நான் அறிந்திடாத சுவை
என்நெஞ்சை துழைத்து
அதிலுள்ள நஞ்சை எல்லாம் எடுத்தாய்
பதமான பேச்சுக்களும் அன்பு நீரோட்ங்களுமாய்
என்னுள் பதமாய் வளர்ந்தாய்
நான் அறியாத மாய உலகை உன்னுள் கட்டினாய்
என் ஊனாகி என்னுள் கலந்தாய்
விவாதங்கள் பல செய்தாய்
வினோத உலகம் கட்டினாய்
தினம் தினம் திகட்டாத இன்பமாய் என்னுள் கலந்தாய்..
உன்சமையலறையில் நானும்
பச்சை காய்கறிகளும் வெம்மையில்
அவை அடுப்பின் தீயில் நான் உன்மோகதீயில்
ரெண்டுமே பக்குவமாய் உன்கைகளுக்குள்
உன்னிடம் விடைபெற்ற அந்த கடைசி நிமிடங்கள்
என் கண்களில் உன்நளின சிரிப்பில்
உன் பூ போன்ற இதழ்கள்
முத்தமிட எத்தனிக்கையில்
தலைகுனிந்த உன் நெற்றியில் என் அதரங்கள்
இன்று உன்னை காணமல் தினம் தினம்
உணர்வில் உன்னுடன் நீ அறியாமல்
என்றும் பசுமையாய் உன் நினைவுககளுடன்

//உணர்வில் உன்னுடன் நீ அறியாமல்
ReplyDeleteஎன்றும் பசுமையாய் உன் நினைவுககளுடன் //nice
super a irukku thodarungal
ReplyDeleteஎன்னுடடைய கிறுகல்களுக்கு அங்கீகாரம் அளித்தமைக்கு நன்றி தமிழ் ...
Deleteஉன்சமையலறையில் நானும்
ReplyDeleteபச்சை காய்கறிகளும் வெம்மையில்
அவை அடுப்பின் தீயில் நான் உன்மோகதீயில்
ரெண்டுமே பக்குவமாய் உன்கைகளுக்குள்
>>
ரெண்டுப் பேரையும் சமைக்க சொன்னா, அதை விட்டு என்ன அழிச்சாட்டியம் பண்ணி இருக்கீங்க நீங்க?
Superb
ReplyDelete