Friday, 21 September 2012

எதற்காக இந்த மூன்று எழுத்து சொல் அன்பே ....




நட்பு என்பது மூன்று எழுத்து


அன்பாக மாறியபோது


கனவு என்று மூன்று எழுத்து


கனவு வளர்ந்த போது


காதல் என்ற மூன்று எழுத்து


காதல் வளர்ந்த போது


உயிர் என்று மூன்று எழுத்து


உயிராக கலந்த போது


இன்று எதற்காக


பிரிவு என்ற மூன்று எழுத்து


சொல் அன்பே ....  




பகுத்தறிவு...




கடவுளே இல்லை என்று

நலமாய் நாத்திகம் பேசினாய்

நாத்திகம் உன்னில் வளர்த்தது

பகுத்தறிவை இல்லை

பலவீனத்தை 

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான் -அவன்

கருணை உள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

என்றான் கண்ணதாசன்

அவனும் நாத்திகவாதியே

அவன் பாசத்தையும் கருணையையும்

உணர்ந்ததினால் ஆத்திகவாதியானான்

நீ இன்னும் பகுத்தறிவுவாதியாக இருப்பதினால்

பாசமும் கருணையும் உன்னில் இல்லாது போயிற்றோ 



Tuesday, 18 September 2012

என்றும் பசுமையாய் உன் நினைவுககளுடன்



இன்று எண்ணி பார்கிறேன் 

என்னுள் பசுமையாய் உன்னை

உன்னை முதன் முதலில் நான் சந்தித்தபோது  

உன் ஓரவிழி பார்வையும் 

பாசமிகு பேச்சும்

நர்த்தனமாடும் கண்களும் 

நளினமான உன் இதழ்களும்

என்னை மயங்க செய்ததென்னவோ உண்மைதான்..
.
நீ காட்டிய பரிவும் பாசமும் 

நான் அறிந்திடாத சுவை 

என்நெஞ்சை துழைத்து 

அதிலுள்ள நஞ்சை எல்லாம் எடுத்தாய்

பதமான பேச்சுக்களும் அன்பு நீரோட்ங்களுமாய் 

என்னுள் பதமாய் வளர்ந்தாய்

நான் அறியாத மாய உலகை உன்னுள் கட்டினாய் 

என் ஊனாகி என்னுள் கலந்தாய்

விவாதங்கள் பல செய்தாய்

வினோத உலகம் கட்டினாய்

தினம் தினம் திகட்டாத இன்பமாய் என்னுள் கலந்தாய்..

பேசாத கதைகள் பல கண்களால் பேசினாய்

உன்சமையலறையில் நானும்

பச்சை காய்கறிகளும் வெம்மையில்

அவை அடுப்பின் தீயில் நான் உன்மோகதீயில்

ரெண்டுமே பக்குவமாய் உன்கைகளுக்குள்

உன்னிடம் விடைபெற்ற அந்த கடைசி நிமிடங்கள்

என் கண்களில் உன்நளின சிரிப்பில்

உன் பூ போன்ற இதழ்கள்

முத்தமிட எத்தனிக்கையில்

தலைகுனிந்த உன் நெற்றியில் என் அதரங்கள்  

இன்று உன்னை காணமல் தினம் தினம்

உணர்வில் உன்னுடன் நீ அறியாமல்

என்றும் பசுமையாய் உன் நினைவுககளுடன் 

Sunday, 16 September 2012

சுதந்திர நாட்டிற்கு நானே ராணியாய்




ராஜகுமாரிகளாய் நாங்கள் தங்க கூண்டுகளில்
கால்நடையாய் மிருகங்கள் முள் வேலிகளில்
இரண்டும் ஒரே இடத்தில்..
காலையில் அவை மேச்சலுக்காக வெளியில்
நாங்கள் உணவுகாக சமயலறையில்
கவனப்படுத்தாத ஒரு வாழ்வு...
மிகுந்த சம்பிரதாயங்களுடன்

ராஜகுமாரனும் வந்தான்

சம்யுக்தையை தூக்கி சென பிரிதிவிராஜனை போல
கால்நடைகளே என்பரித்வியுடன் ப்ரியமாக செல்கிறேன்

அவைகளும் சங்கடத்துடன் பிரியா விடைகொடுத்தன

ஆனால் நான் மட்டும் என் ப்ரிதிவியுடன் பிரியமாக இல்லை

காலனும் பிரியமாக இருந்தான் என்றுஆன போது

சம்பிரதாய சிறையில் தகரகூண்டில் மீண்டும்

அன்று சொல்லியள சிறைவசிகளும் கால்நடைகளும் ..

இன்றோ நாகரிக உலகின்

நஞ்சுமுகம் அறியா நல்பெண்ணாய்

போராட்டத்தில் குதிக்கபடைகள் இல்லை

திரிபடை கூட்டம் கூட்டாமாய்

எதிராளியாக நான் துருபிடித்த வாழ்களோடு..

கறைபடிந்த கண்ணாடிவழியே சூரிய வெளிச்சம்

அந்த வெழிச்சத்தின் துணையோடு

சில காட்டுபூகள் தலையில் சூடி

போருக்கு தயாரானேன் ..

வீழ்ந்தனர் எதிகளின் சிறுபடை

தகரவாழ் தங்கமாக மின்நிற்று

வீறு கொண்டு நடந்தேன் ஓற்றை ஆளாயை

இன்று என் ராஜ்யத்தில் நானே மகராணி

இன்று நான் சிறைபிடித்தேன் சம்ரதாய நடப்புகளை

அவை என்முன்னே செல்லாகாசாய் சேவை செய்கின்றன

எனி ஒரு சிறை வேண்டாம் விடுவித்தேன் அவைகளை

கூடவே நானும் சுதந்திர பறவையாய் ...

என் நாட்டிற்கு நானே ராணியாய்

Tuesday, 11 September 2012

அச்சத்தின் காவலன்

 
கடிகாரத்தின் சத்தத்தில்

பலமாய் செல்லும் வாகன இரச்சலில்

பயம் கொள்ளும் என்னில்

அச்சத்தை போக்கிய நீ

 
நான் அச்சமே இல்லாமல் வாழ

நினைக்கும் போது நீ


என் அருகில் இல்லாமை

நிரந்தர அச்சமாகிவிடுமோ

என்று அச்சப்பட

என் அச்சத்தை போக்கிய நீ
 

ன் அச்சத்தின் காவலன்

உனிடம் நான் கேட்பது

எனக்குள் இருக்கும் ஒரே அச்சத்தை

என் கால்கள் மீண்டும் பதியுமோ

நான் நடந்த வீதியில்…..

 


Friday, 7 September 2012

அன்னியனாகவாவது உன்னுள்


அறையினுள் நடந்த நம்கால் தடங்கள்
இன்னும் அழியவில்லை
உன் கடைசி முத்தம் இன்னும் காயவில்லை
உன் கடைசி அரவணைப்பு இன்னும் அகலவில்லை
உன் ஓரபார்வை தந்தபிரியா விடை சமிக்ஞை
இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை
இதெல்லாம் அகலவில்லை
ஆனால் அதற்குள் நீமட்டும் அகன்றதென்ன

உன் சந்தோஷதிற்க்காக விலகிப்போக எண்ணிய என்னக்கு
உன் நினைவுகளில் இருந்து விலக முடியவில்லை
உன்னை சந்திப்பேன் என்ற நினைவில்
அன்பை தேடிவந்த கால்கள் பெருமூச்செறிந்து நின்றன

நீ என்னை அந்நியபடுத்திய போது
உன்னை மறக்க முயன்றேன்
உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும் உன் நினைவுகளில்
மூழ்கி போய் மூச்சடைத்து நெஞ்சு முட்டியது

உன் கடைசிவரை நான் வருவேன் என்று சொன்னவள்
கடைதெருவில் வீசிவிட்டு சென்றாய்

அன்பு அழிவதில்லை என்று நினைத்து இருந்தேன்
ஆனால் நீ அதை உன்னில் அழித்து விட்டாய் என்று
எண்ணியபோது அது என்னில் இருந்து என்ன பயன்

உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை
உன் உள்ளம் விரும்பும் உண்மையை உன்னிடம் விட்டுவிட்டு
வலியை மட்டும் என்னுடன் எடுத்து செல்கிறேன்

எனக்கு மட்டும் நீ என்று நினைத்து இருந்தேன்
ஆனால் என்னை மட்டும் நீ தடை செய்தாய்

ஒவ்வரு முறையும் உன் கவிதைகளை
வேறு யாரரோ படித்து கிழித்து போட்ட
துகள்களில் இருந்து துன்பத்தோடு வாசித்தேன்

நாம் அன்பாய் கழித்த காலங்களில் இன்று
நான் மட்டும் தனியே நிற்கிறேன்

அன்பு கொண்டு நான் செய்த தவறுகள்
அதற்காக நீ திட்டிய தீ காயங்கள்

உன் நினைவுகளில் நான் இல்லை என்ற போதும்
வாழ்கையை வாழ்ந்து தான் தீர்க்க வேண்டும்
என்றாவது உன்னை சந்திப்பேன் என்று
அன்பு கொண்டு இல்லாவிட்டாலும்
அன்னியனாகவாவது உன்னுள்
நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்