Friday, 4 January 2013

மனதின் குமுறல்



உன் நினைவுகளால் நான் 
வீழ்ந்து போனாலும் 
உன்னை விட்டுவிலகவில்லை 

நாம் இருந்த இடங்கள் யாவும் 
மறைந்து போனாலும் நீ விட்டு செனற 
தடயங்கள் இன்னும் மறையவில்லை 

எதிர் வாதங்கள் எல்லாம் 
எதிர் மறையானதால்  என் எதிரில்
எதிரியாக கூட நீ இல்லை 

நிஜங்களெல்லாம் ரணமாகி போனதால்  
நினைவுகளால்  கூட அதை 
குணபடுத்த முடியவில்லை

புன்னகை சூழ்ந்த இதழ்கள் இரண்டும் 
மௌனமாகி போனதால் உன்
அழைப்பைகூட அவை உதிர்க்கவில்லை 

பிரிவுகள் நம்மை பிரித்து வைத்தாலும் 
தொலைவுகள் நம்மை 
தொலைத்து விடவில்லை 

மறுப்புகள் எல்லாம் மலை போல் இருந்தாலும் 
மீண்டு வருவதும் மாண்டு போவதும் 
நம் கைகளில்தான் அன்பே 


8 comments:

  1. நல்லாருக்கு தம்பி. சின்ன ஆலோசனை. எடிட்டிங் இன்னும் வேணுமோ...?
    ஹன்ஸாக்கா.

    ReplyDelete
  2. அக்கா அவுள்வுதான் இருக்கு தலைகுள்ளே ..கொஞ்சம் எந்த இடதில் திருத்தல்கள் வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா உங்கள கருத்துக்களுக்கு

      Delete
  3. Maruppugal ellaam malai pol irunthalum meendu varuvathum maandu povathum nam kaigalilthaan anbe..!! athaiye thaan naanum kekkuren Bhaskar yenn intha kaadhal tholainthu ponathu..???

    ReplyDelete
    Replies
    1. அதுதான் எனக்கும் தெரியல நாயகனின் மனதின் வெளிப்பாடு நாயகியின் செய்கைகளின் செயல்பாடு இதுல நமக்கு எங்கே தெரியும் லல்லி யாரு தொலைசாங்கன்னு ...நன்றி லல்லி ...

      Delete
  4. நாம் இருந்த இடங்கள் யாவும்
    மறைந்து போனாலும் நீ விட்டு செனற
    தடயங்கள் இன்னும் மறையவில்லை

    ஒவ்வொருவரும் சில தடயங்களை விட்டு செல்கிறார்கள் ,அதுவும் காதலில் தடயங்கள் பலவுண்டு ;சில தடயங்கள் மனதில் பதிந்துவிடும் அது யாராலும் அழிக்கமுடியாது ;உங்களின் இந்த அற்புத வரிகள் நிதர்சனமான உண்மை உண்மையான கவிதைகள் உலகம் உள்ளவரை உயிரோடு இருக்கும் .வாழ்த்துக்கள் வளர்க உங்கள் கவிதை .வாழ்க தமிழ்

    ReplyDelete