உன் நினைவுகளால் நான்
வீழ்ந்து போனாலும்
உன்னை விட்டுவிலகவில்லை
நாம் இருந்த இடங்கள் யாவும்
மறைந்து போனாலும் நீ விட்டு செனற
தடயங்கள் இன்னும் மறையவில்லை
எதிர் வாதங்கள் எல்லாம்
எதிர் மறையானதால் என் எதிரில்
எதிரியாக கூட நீ இல்லை
நிஜங்களெல்லாம் ரணமாகி போனதால்
நினைவுகளால் கூட அதை
குணபடுத்த முடியவில்லை
புன்னகை சூழ்ந்த இதழ்கள் இரண்டும்
மௌனமாகி போனதால் உன்
அழைப்பைகூட அவை உதிர்க்கவில்லை
பிரிவுகள் நம்மை பிரித்து வைத்தாலும்
தொலைவுகள் நம்மை
தொலைத்து விடவில்லை
மறுப்புகள் எல்லாம் மலை போல் இருந்தாலும்
மீண்டு வருவதும் மாண்டு போவதும்
நம் கைகளில்தான் அன்பே


நல்லாருக்கு தம்பி. சின்ன ஆலோசனை. எடிட்டிங் இன்னும் வேணுமோ...?
ReplyDeleteஹன்ஸாக்கா.
அக்கா அவுள்வுதான் இருக்கு தலைகுள்ளே ..கொஞ்சம் எந்த இடதில் திருத்தல்கள் வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள் ...
ReplyDeleteநன்றி அக்கா உங்கள கருத்துக்களுக்கு
DeleteMaruppugal ellaam malai pol irunthalum meendu varuvathum maandu povathum nam kaigalilthaan anbe..!! athaiye thaan naanum kekkuren Bhaskar yenn intha kaadhal tholainthu ponathu..???
ReplyDeleteஅதுதான் எனக்கும் தெரியல நாயகனின் மனதின் வெளிப்பாடு நாயகியின் செய்கைகளின் செயல்பாடு இதுல நமக்கு எங்கே தெரியும் லல்லி யாரு தொலைசாங்கன்னு ...நன்றி லல்லி ...
Deletenice ma
ReplyDeletethank you Tamil
ReplyDeleteநாம் இருந்த இடங்கள் யாவும்
ReplyDeleteமறைந்து போனாலும் நீ விட்டு செனற
தடயங்கள் இன்னும் மறையவில்லை
ஒவ்வொருவரும் சில தடயங்களை விட்டு செல்கிறார்கள் ,அதுவும் காதலில் தடயங்கள் பலவுண்டு ;சில தடயங்கள் மனதில் பதிந்துவிடும் அது யாராலும் அழிக்கமுடியாது ;உங்களின் இந்த அற்புத வரிகள் நிதர்சனமான உண்மை உண்மையான கவிதைகள் உலகம் உள்ளவரை உயிரோடு இருக்கும் .வாழ்த்துக்கள் வளர்க உங்கள் கவிதை .வாழ்க தமிழ்