Sunday, 9 December 2012

தேடுகின்றேன் உன் நினைவுகளை


பனிபடர்ந்த காலை பொழுது
உறைகின்ற குளிர் காற்று
உறையாத உன் நினைவு
தேடினேன் உன்னை

தூரத்தில் ஓர் உருவம் 
மங்கலாய் தவிப்போடு
தவறவிட்ட உன்னைத்தேடி 
அருகில் சென்றேன்   
நீ தொலைத்த என்நினைவு
திசை தெரியாமல்

தேடுகின்றேன் உன்நினைவுகளை 
நாம்நின்ற இடங்கள் தனில் 
தனித்து புலம்புகிறேன்
அனாதையான என்
நினைவுகளுடன்

வாழ்கை சகரத்தில்
வழி துணையாய் வந்தவளே
கால சகரத்தில்
காணாமல் போனதேனோ
அறிவாயோ என்
நெஞ்சின் தவிப்பை

வருவேன் என்று
சொல்லி சென்றாயே
இறந்தகாலம் முடிந்து
எதிர்காலமும் வந்துவிட்டது
வசந்த காலம் மட்டும்
வரவே இல்லை நீ இல்லாமல்

இளமையின் சுவடுகள்
முதுமையாகி ஊன்று
கோலாகி போனாலும்
காலத்தை தொலைத்து
காலனுடன் சென்றாலும்
கவனமாக பிறப்பேன்
உன் அருகில் நீங்காத
 துணையாக  
 

14 comments:

  1. வாழ்கை சகரத்தில்
    வழி துணையாய் வந்தவளே
    கால சகரத்தில்
    காணாமல் போனதேனோ

    எனும் வரிகள் வைரம் பாய்ந்தது போல் நெஞ்சில் பதிந்தது ,
    வசந்த காலம் ,அவள் இல்லாமலா ?
    அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அவர்கள் இணையட்டும்
    வாழ்த்துக்கள் உங்களுக்கும்
    உங்கள்
    நாயகனுக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நவநீதம் குருக்கள் முடியாத கணக்குகள் என்று எதுவும் இல்லை ஒரு வருஷம் fail ஆகி விட்டால் அடுத்தடவை pass பண்ணுவதில்லையா வேண்டுவோம் அந்த சர்வேஸ்வரனிடம்
      நாயகனுக்காக அடுத்த முறை இணைவதற்கு நன்றி உங்கள் சிந்தனைகளுக்கு

      Delete
  2. REALLY GOOD. BUT WHAT I FEEL IS IT NEEDS SOME EDITING WORK. SUPER SUPER. BEST WISHES THAMBI. HANSA.

    ReplyDelete
    Replies
    1. that's what i need some experts opinion thank you akka..

      Delete
  3. sirappaana kavithai varikaL peNkalaikkavaravee ezuthap pattavai.arumai

    ReplyDelete
  4. sirappaana kavithai varikaL peNkalaikkavaravee ezuthap pattavai.arumai

    ReplyDelete
    Replies
    1. இல்லை அன்பு கொண்ட உள்ளங்களுக்கு புரியும் அவர்கள் புரிந்து கொள்வார்கள் உண்மையின் வலியை ...நன்றி நாகைகவின்..

      Delete
  5. காலத்தை தொலைத்து
    காலனுடன் சென்றாலும்
    கவனமாக பிறப்பேன்
    உன் அருகில் நீங்காத
    துணையாக ....Aaha evlo aazhantha anbu..kattayam serkka vendum ivargal iruvaraiyum..serthu veikka prathippen iravanidam naanum Bhaskar..superb..!!!

    ReplyDelete
  6. நல்ல உள்ளங்கள் சேரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய பிரார்த்தனை அதையும் மீறி செல்வது கடவுளின் தீர்ப்பு ...

    ReplyDelete
  7. காலனுடன் சென்றாலும்
    கவனமாக பிறப்பேன்
    உன் அருகில் நீங்காத
    துணையாக

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் உங்கள் கருத்துகளுக்கு ..

      Delete
  8. kavithaiyin theedalil vaazkkai irukkiRadhu vaazththukkaL arumaiyaana kavithai

    ReplyDelete
  9. kavithaiyin theedalil vaazkkai irukkiRadhu vaazththukkaL arumaiyaana kavithai

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாகை கவின் உங்கள் கருத்துகளுக்கு ...

      Delete