இளமை அகன்றுவிட முதுமை அணைத்துக்கொள்ள
இயலாமையில் சோர்ந்துபோய் அசைபோடும் மனது
காலமதில் பயிர் செய்யாமல் காத்திருந்த கன்னிதனையும்
கடைத்தெருவில் களைந்துவிட்டு கவனமில்ல வாழ்வுதனை
கடமையாக வாழ்ந்தேனே
இளமைதனின் முறுக்கோடு இயலாதது ஏதுமில்லைஎன்று
அகங்காரம் அங்கமெல்லாம் ஆபரணமாய் சூடி கொண்டு
ஆனந்தமாய் இருந்தேனே
தனித்திருப்பது சுகம் என்றும் இறைவன் அருள் வரம் என்றும்
பந்த பாசங்கள் சிறை என்றும் துணை என்பது துன்பம் என்றும்
காலமதை வீணே கழித்தேனே
வாக்குகளும் வாதங்களும் வசந்தகால பருவத்திலே
வசந்தத்தை வலுவிழக்க செய்தனவே இன்று
வாதம் செய்ய கூட நீ இல்லாமல் வாய் மூடி கிடகின்றேனே
உடல் தளர்ந்து உறுதுணையும் இல்லாமல்
உற்றாரும் பெற்றாறும் இல்லாமல்
பலமெல்லாம் பலகீனமாய் மனமிடும் பணிஅதனை
உடல்கூட உதாசீன படுத்தும் உரமில்லா உடல்கொண்டு
உழலுகின்றேன் உள்ளினுள்ளே
காலமதை தவறவிட்டு காலனுக்கு காத்திருக்கும் முதுமைதனில்
கனவிலும் நனவிலும் கடந்துவிட்ட காலம்தனை வீழும் வரை வீழாது
வேகும்வரை நினைதிருப்பேனே


classic Bhaskar..!!!!
ReplyDeletethanks lalli...
Deletearumaiyaana padhivu
Deletearumaiyaana padhivu
Deletenanti nagai kavin....
Deletegood. really nice thambi. bit sad.but good. Hansa
ReplyDeletethank you Hansa akka..
ReplyDeleteமுதுமை உடலுக்கு மட்டும் வந்தால் போதும் உள்ளத்திற்கு வேண்டாம்
ReplyDeleteமூப்பு ஒரு பிணி என்பது மட்டும் உண்மை .
இளமையில் துள்ளல் முதுமையில் தள்ளல் இதுதான் வாழ்க்கை
தங்களின் கவிதை முதுமையை முழுமையாக வர்ணிக்கிறது ,இளமையில் செய்த தவறுகள் முதுமையில் மட்டுமே உணரப்படுகிறது ,நல்ல வர்ணனை நல்ல நடை .....வாழ்த்துக்கள்
நன்றி Navaneetha Giri Gurukkalமுதுமையில் தான் ஞானம் பெறுகிறோம் நன்றி உங்கள் கருத்துக்கு
ReplyDelete