Thursday, 6 December 2012

முதுமையின் புலம்பல்


இளமை அகன்றுவிட  முதுமை அணைத்துக்கொள்ள
இயலாமையில் சோர்ந்துபோய் அசைபோடும் மனது

காலமதில் பயிர் செய்யாமல்  காத்திருந்த கன்னிதனையும்
கடைத்தெருவில் களைந்துவிட்டு  கவனமில்ல வாழ்வுதனை
கடமையாக வாழ்ந்தேனே

இளமைதனின் முறுக்கோடு இயலாதது ஏதுமில்லைஎன்று
அகங்காரம் அங்கமெல்லாம் ஆபரணமாய் சூடி கொண்டு 
ஆனந்தமாய் இருந்தேனே 

தனித்திருப்பது சுகம் என்றும்  இறைவன் அருள் வரம் என்றும் 
பந்த பாசங்கள் சிறை என்றும் துணை என்பது துன்பம் என்றும் 
காலமதை வீணே கழித்தேனே 
   
வாக்குகளும் வாதங்களும் வசந்தகால பருவத்திலே
வசந்தத்தை வலுவிழக்க செய்தனவே இன்று
வாதம் செய்ய கூட நீ இல்லாமல் வாய் மூடி கிடகின்றேனே

உடல் தளர்ந்து உறுதுணையும் இல்லாமல் 
உற்றாரும் பெற்றாறும் இல்லாமல் 
பலமெல்லாம் பலகீனமாய் மனமிடும் பணிஅதனை 
உடல்கூட உதாசீன படுத்தும் உரமில்லா உடல்கொண்டு 
உழலுகின்றேன் உள்ளினுள்ளே 

காலமதை தவறவிட்டு காலனுக்கு காத்திருக்கும் முதுமைதனில் 
கனவிலும் நனவிலும் கடந்துவிட்ட காலம்தனை வீழும் வரை வீழாது 
வேகும்வரை நினைதிருப்பேனே    


9 comments:

  1. good. really nice thambi. bit sad.but good. Hansa

    ReplyDelete
  2. முதுமை உடலுக்கு மட்டும் வந்தால் போதும் உள்ளத்திற்கு வேண்டாம்
    மூப்பு ஒரு பிணி என்பது மட்டும் உண்மை .
    இளமையில் துள்ளல் முதுமையில் தள்ளல் இதுதான் வாழ்க்கை
    தங்களின் கவிதை முதுமையை முழுமையாக வர்ணிக்கிறது ,இளமையில் செய்த தவறுகள் முதுமையில் மட்டுமே உணரப்படுகிறது ,நல்ல வர்ணனை நல்ல நடை .....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி Navaneetha Giri Gurukkalமுதுமையில் தான் ஞானம் பெறுகிறோம் நன்றி உங்கள் கருத்துக்கு

    ReplyDelete