அன்று
பூ போன்ற பாவை உன்னை
பூவாக மேனி சூட
பூஜை வரை காத்திருந்து
பூரணமாய் என்னுள் சேர்த்தேன்
மென்மையான மலர் உன்னை
மெய்யான உணர்வு கொண்டு
மெய் உடல் தீண்டி சிலிர்த்து
மெல்ல உன்னை அரவணைக்க
இதழ்களில் இதழ் சேர்த்து
இனிமையான மதுரம் அருந்தி
இன்புற்று காதல்கொண்டு
இடைவெளி இல்லாமல் தனித்து இருக்க
ஒருமுறை தான் வாழ்வினில் வரும்
ஒருமித்த காதலது நினைவுகளில் நீங்காது நிற்கும்
ஒரு பொழுதும் அழியாத அனுபவங்களுடன்
ஓர்மைகளாய் பருவத்தின் பதிவுதனை கோலமிடும்
இன்று
இயங்குதல் மட்டுமே காதலாய்
மனதொத்த காதல் நீங்கி
உடல் சேரும் அவல காதல்
காதல் என்னும் போர்வையினில்
காமம் மட்டுமே இலக்கணமாய்
கனவுகளில் கூட காசுதனை
கணக்கு போடும் காதல் இது
உணர்வுகளில் கூட உணர்ச்சியற்று
மனமில்லாத மனித எந்திரந்களாய்
மலர் விட்டு மலர் தாவும்
மானிட பட்சிகளாய் காதல் இன்று
அர்பணிப்பு இல்லாமல்
அவயங்களில் மட்டும்
அலையாடும் காதலினால்
நினைவுகள் கூட நிரந்தரம் இல்லை



ம்ம் அருமை
ReplyDeleteநன்றி விஜி உங்கள் வருகைக்கு
ReplyDelete//கனவுகளில் கூட காசுதனை
ReplyDeleteகணக்கு போடும் காதல் இது //nice pa
உண்மைதான் தமிழ் நன்றி
ReplyDelete'ninaivugal kooda nirantharam illai'..move on apdinu poikitte irukkuthu ippothaya kadhal..!!! Arumai Nanbare..:):)
ReplyDeleteThanks for comments lalli..welcome ...
ReplyDeleteவணக்கம். நல்ல கருத்து. வாழ்த்துகள். நிறைய பதியுங்கள்.
ReplyDelete//அர்பணிப்பு இல்லாமல்
அவயங்களில் மட்டும்
அலையாடும் காதலினால்
நினைவுகள் கூட நிரந்தரம் இல்லை //
எல்லாமே இப்படித்தான் காசுக்காக நடக்கிறது.மோகனா
நாம் அன்றாடம் வாழ்கையில் பார்க்கிறோம் இல்லையா அதன் தாகத்தில் எழுதிய வரிகள் நன்றி உங்கள் வருகைக்கு
ReplyDelete