Wednesday, 7 November 2012

காதல் அன்றும் இன்றும்


அன்று

பூ போன்ற பாவை  உன்னை 
பூவாக மேனி சூட 
பூஜை வரை  காத்திருந்து 
பூரணமாய் என்னுள் சேர்த்தேன் 

மென்மையான மலர் உன்னை 
மெய்யான உணர்வு கொண்டு 
மெய் உடல் தீண்டி சிலிர்த்து 
மெல்ல உன்னை அரவணைக்க 

இதழ்களில்  இதழ் சேர்த்து 
இனிமையான மதுரம் அருந்தி 
இன்புற்று காதல்கொண்டு 
இடைவெளி இல்லாமல் தனித்து இருக்க 

ஒருமுறை தான் வாழ்வினில் வரும் 
ஒருமித்த காதலது நினைவுகளில் நீங்காது நிற்கும் 
ஒரு பொழுதும் அழியாத அனுபவங்களுடன் 
ஓர்மைகளாய் பருவத்தின் பதிவுதனை கோலமிடும்  



இன்று


 

இயந்திர வாழ்கையில் 
இயங்குதல் மட்டுமே காதலாய் 
மனதொத்த காதல் நீங்கி 
உடல் சேரும் அவல காதல் 

காதல் என்னும் போர்வையினில் 
காமம் மட்டுமே இலக்கணமாய் 
கனவுகளில் கூட காசுதனை 
கணக்கு போடும் காதல் இது 

உணர்வுகளில் கூட உணர்ச்சியற்று 
மனமில்லாத மனித  எந்திரந்களாய் 
மலர் விட்டு மலர் தாவும் 
மானிட பட்சிகளாய் காதல் இன்று 

அர்பணிப்பு இல்லாமல் 
அவயங்களில் மட்டும் 
அலையாடும் காதலினால் 
நினைவுகள் கூட நிரந்தரம் இல்லை   



8 comments:

  1. நன்றி விஜி உங்கள் வருகைக்கு

    ReplyDelete
  2. //கனவுகளில் கூட காசுதனை
    கணக்கு போடும் காதல் இது //nice pa

    ReplyDelete
  3. உண்மைதான் தமிழ் நன்றி

    ReplyDelete
  4. 'ninaivugal kooda nirantharam illai'..move on apdinu poikitte irukkuthu ippothaya kadhal..!!! Arumai Nanbare..:):)

    ReplyDelete
  5. Thanks for comments lalli..welcome ...

    ReplyDelete
  6. வணக்கம். நல்ல கருத்து. வாழ்த்துகள். நிறைய பதியுங்கள்.

    //அர்பணிப்பு இல்லாமல்
    அவயங்களில் மட்டும்
    அலையாடும் காதலினால்
    நினைவுகள் கூட நிரந்தரம் இல்லை //
    எல்லாமே இப்படித்தான் காசுக்காக நடக்கிறது.மோகனா

    ReplyDelete
  7. நாம் அன்றாடம் வாழ்கையில் பார்க்கிறோம் இல்லையா அதன் தாகத்தில் எழுதிய வரிகள் நன்றி உங்கள் வருகைக்கு

    ReplyDelete