Sunday, 4 November 2012

நான் அவன் இல்லை


கால்மேல் காலிட்டு
கைகளில் காபி ஏந்தி
ஈர தலை கோதி
அருகருகே அமர்ந்து

குளிரும் காலை பொழுது
கைகளை கோர்த்துக்கொண்டு
கண்களால் மோதிக்கொண்டு
அதரங்களில் அர்த்த புனகையோடு 

தினம் தினம் உன் இதழ்
நனைத்து உன்னுள் புகுந்து
உன் நாடி நரம்பெல்லாம்
ஓடியாடி உன்னை பரவச படுத்தி

அது  நான் என  நினைத்தேன் 
என் அருகில் உன் கைகளில் கவனமே
செய்யபடாமல் சுவையான காபி
முத்த நீரூற்றில் உன் இதழ்களில்

6 comments:

  1. Replies
    1. நன்றி நாகை கவின்

      Delete
    2. மிக நேர்த்தியான கவிதை ,எழுதிய கைக்கு எத்தினை காபி வேண்டுமானாலும் கொடுக்கலாம் (இது ஆனந்த காபி அல்லவா) )

      Delete
    3. ஹ ஹா நிச்சயமா நன்றி நவநீதன் உங்கள் வருகைக்கு

      Delete