உன் நினைவுகளை நிகழ்வுகளோடு
என் நெஞ்சினில்
பதிவு செய்தபோது
உன் அழைப்பையும்
என் அலைபேசியில்
பதிவு செய்தேனடி
வெயில் காலம்
வந்தது
வெம்மையின்
தாக்கத்தில் பூமியும்
வெறுமையின்
தாக்கத்தில் என் மனதும்
பெண்ணே உன் அழைப்பு இல்லாமல்
கார்காலம் வந்தது
கடும் குளிர் சூழ்ந்தது
காத்திருக்க தொடங்கியது மனது
காரிகையே உன் அழைப்பு இல்லாமல்
கால சக்கரம்
சுழன்றது
கவலைகளும் சூழ்ந்து நின்றது
இனி ஒரு அழைப்பு
இல்லை என்றபோது
சிணுங்கியது என்
அலைபேசி
சிதறுண்ட மனதின்
சிறிய கனவு என்று
சீண்டாமல்
உட்கார்ந்திருந்தேன்
சிறிதே உற்றுபார்த்த போது
வெயில் காலத்தின் வெம்மையும்
குளிர் காலத்தின் குளுமையும்
ஒருங்கே மனதில் உணர்வாய்
காரணம் அழைப்பில் நீ ........

wareh wah..!!! arputham..:)
ReplyDeleteநன்றி லல்லி
DeleteExcellent ,welcome to lovely call expected so long ..........
ReplyDeleteha..haa..not like that just fun,thank you for your visit Navaneethan gurukkal
ReplyDelete