Friday, 16 November 2012

தொடர்பு எல்லைக்கு வெளியே



உன்  நினைவுகளை நிகழ்வுகளோடு
என் நெஞ்சினில் பதிவு செய்தபோது
உன் அழைப்பையும்
என் அலைபேசியில் பதிவு செய்தேனடி

வெயில் காலம் வந்தது
வெம்மையின் தாக்கத்தில் பூமியும்
வெறுமையின் தாக்கத்தில் என் மனதும் 
பெண்ணே உன் அழைப்பு இல்லாமல் 

கார்காலம் வந்தது 
கடும் குளிர் சூழ்ந்தது 
காத்திருக்க தொடங்கியது மனது 
காரிகையே உன் அழைப்பு இல்லாமல்   

கால சக்கரம் சுழன்றது 
கவலைகளும் சூழ்ந்து நின்றது 
இனி ஒரு அழைப்பு 
இல்லை என்றபோது  

சிணுங்கியது என் அலைபேசி
சிதறுண்ட மனதின் சிறிய கனவு என்று
சீண்டாமல் உட்கார்ந்திருந்தேன்
சிறிதே உற்றுபார்த்த போது 

வெயில் காலத்தின் வெம்மையும் 
குளிர் காலத்தின் குளுமையும் 
ஒருங்கே மனதில் உணர்வாய் 
காரணம் அழைப்பில் நீ ........

4 comments:

  1. Excellent ,welcome to lovely call expected so long ..........

    ReplyDelete
  2. ha..haa..not like that just fun,thank you for your visit Navaneethan gurukkal

    ReplyDelete