நீண்ட நெடும் தண்டவாளங்கள்
நினைவுகளை சுமந்து
நிற்கிற இரயில் வண்டிகள்
பயணங்கள் புதியதில்லை பாரங்கள் புதிது
கண்திறந்து வெளியே மனது
பிரியா விடைதரும் உறவுகள் கூட்டம்
இருகைகளின் ஆட்டம் மரங்களின் ஓட்டம்
உள்ளூரில் கொடிகட்ட தெரியாதவர்
அமெரிக்க அரசியலை அலசும் அவலம்
அலைபேசியில் அளாவும் பயணிகள்
வாங்கிய புத்தகத்தின் வாசித்த வரிகள்
கண்களில் மட்டும் பதிந்து
மனதில் உதிர்ந்து போகின்ற மாயம்
கண்மூடி உள்ளே பயணிக்கையில்
அடுத்து இருப்வரையும் எதிர் இருப்வரையும் மறந்து
நினைவுகள் இரயிலை விட வேகமாய் பினோக்கி
என் காதல் தண்டவாளமாக
உன் இதயம் இரயிலாக
பதிவுகள் பயணமாக ஒரு பயணம்
சிறுவயதில் பயணித்த முதல் பயணத்தின் உற்சாகம்
உன்னுடன் கைகோர்த்து உடல் உரசி
உன்னுடன் பயணித்தபோது உணர்ந்தேனே
சாய்ந்து கிடக்கும் என் தேகம்
மன ஓட்டதோடு கண்விழிக்கையில்
விழி முன்னே மீண்டும்
அரசியல் அலைபேசி உரையாடல்கள்
மீண்டும் நான் மட்டும்
உன் நினைவுகளுடன் நீ இல்லாமல்
ஒரு இரயில் பயணம்


நன்று தம்பி. வார்த்தைகளைக் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ? காகித பத்திரிகைகளுக்கும் அனுப்பலாமே?....ஹன்ஸா
ReplyDeleteநிச்சயமாக நாம் அன்றாடம் பஸ்சிலும் ரயிலிலும் காணும் காட்சி இருந்தாலும் வார்த்தைகளின் வேகத்தை கொஞ்சம் குறைத்து கொள்கிறேன் நன்றி அக்கா உங்கள் கருத்திற்கு
Deleteபத்திரிகைகளுக்கு கொடுக்கிற அளவு என் எழுத்துக்கள் தரமானவை இல்லை மற்றும் நான் நேர போக்கிற்காக எழுதுகிறேன் ..
//என் காதல் தண்டவாளமாக
ReplyDeleteஉன் இதயம் இரயிலாக
பதிவுகள் பயணமாக ஒரு பயணம் //
nandraga irukirathu....2 varigalilum ezhuthaalam..enbathu varigalilum ezhuthalaam.....nice pa...
ReplyDeleteஉங்கள் கருத்துகளுக்கு நன்றி தமிழ்
Deleteவணக்கம் பாஸ்கர். கவிதை மிக நன்று.
ReplyDelete//கண்மூடி உள்ளே பயணிக்கையில்
அடுத்து இருப்வரையும் எதிர் இருப்வரையும் மறந்து
நினைவுகள் இரயிலை விட வேகமாய் பினோக்கி//
உண்மை பேசும் வரிகள். அருமை. வாழ்த்துகள். ..மோகனா
உங்கள் வரவுக்கு நன்றி மோகனா
Deleteஅருமையான ஒரு ரெயில் பயணம்
ReplyDeleteநன்றி ஜீவா இரயில் பயணத்தில் இணைந்தமைக்காக
Delete