Tuesday, 13 November 2012

இரயில் பயணம்



நீண்ட நெடும் தண்டவாளங்கள்
நினைவுகளை சுமந்து
நிற்கிற இரயில் வண்டிகள் 

பயணங்கள் புதியதில்லை பாரங்கள் புதிது 
கண்திறந்து வெளியே மனது
பிரியா விடைதரும் உறவுகள் கூட்டம்
இருகைகளின் ஆட்டம் மரங்களின் ஓட்டம்

உள்ளூரில் கொடிகட்ட தெரியாதவர் 
அமெரிக்க அரசியலை அலசும் அவலம் 
அலைபேசியில் அளாவும் பயணிகள் 

வாங்கிய புத்தகத்தின் வாசித்த வரிகள் 
கண்களில் மட்டும் பதிந்து 
மனதில்  உதிர்ந்து போகின்ற மாயம் 

கண்மூடி உள்ளே பயணிக்கையில் 
அடுத்து இருப்வரையும் எதிர் இருப்வரையும் மறந்து 
நினைவுகள் இரயிலை விட வேகமாய்  பினோக்கி 

என் காதல்  தண்டவாளமாக 
உன்  இதயம் இரயிலாக
பதிவுகள் பயணமாக ஒரு பயணம்

சிறுவயதில் பயணித்த முதல் பயணத்தின் உற்சாகம்
உன்னுடன் கைகோர்த்து உடல் உரசி
உன்னுடன் பயணித்தபோது உணர்ந்தேனே

சாய்ந்து கிடக்கும் என் தேகம்
ன் கை பிடித்து தாளமிடும் விரல்கள்
உணர்வு ஊற்றாய் மனங்கள்

மன ஓட்டதோடு கண்விழிக்கையில்
விழி முன்னே மீண்டும்
அரசியல் அலைபேசி உரையாடல்கள்

மீண்டும் நான் மட்டும்
உன் நினைவுகளுடன் நீ இல்லாமல்
ஒரு இரயில் பயணம்

9 comments:

  1. நன்று தம்பி. வார்த்தைகளைக் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ? காகித பத்திரிகைகளுக்கும் அனுப்பலாமே?....ஹன்ஸா

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நாம் அன்றாடம் பஸ்சிலும் ரயிலிலும் காணும் காட்சி இருந்தாலும் வார்த்தைகளின் வேகத்தை கொஞ்சம் குறைத்து கொள்கிறேன் நன்றி அக்கா உங்கள் கருத்திற்கு
      பத்திரிகைகளுக்கு கொடுக்கிற அளவு என் எழுத்துக்கள் தரமானவை இல்லை மற்றும் நான் நேர போக்கிற்காக எழுதுகிறேன் ..

      Delete
  2. //என் காதல் தண்டவாளமாக
    உன் இதயம் இரயிலாக
    பதிவுகள் பயணமாக ஒரு பயணம் //

    ReplyDelete
  3. nandraga irukirathu....2 varigalilum ezhuthaalam..enbathu varigalilum ezhuthalaam.....nice pa...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துகளுக்கு நன்றி தமிழ்

      Delete
  4. வணக்கம் பாஸ்கர். கவிதை மிக நன்று.
    //கண்மூடி உள்ளே பயணிக்கையில்
    அடுத்து இருப்வரையும் எதிர் இருப்வரையும் மறந்து
    நினைவுகள் இரயிலை விட வேகமாய் பினோக்கி//
    உண்மை பேசும் வரிகள். அருமை. வாழ்த்துகள். ..மோகனா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவுக்கு நன்றி மோகனா

      Delete
  5. அருமையான ஒரு ரெயில் பயணம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா இரயில் பயணத்தில் இணைந்தமைக்காக

      Delete