Thursday, 1 November 2012

எத்தனை வடிவங்கள் தான் உனக்கு


நிலத்தினில் மரமாக
மரத்தினில் இலையாக
இலை மறைவில் பூக்களாக
பூவினுள் வண்டாக
என்மனதை குடைகிறாய்

தண்ணீரில் நீரோட்டமாக 
நீரோட்டத்தில் சிப்பியாக 
சிப்பினுள் முத்தாக 
முத்தினுள் ஒளியாக 
என் கண்களில் நிற்கிறாய்   

நெருப்பினுள் தணலாக
தணலே தேகமாக
தேகமே ஸ்பரிசமாக
ஸ்பரிசமே தீண்டலாக
உடலையே வேள்வியாக்குகிறாய்

ஆகாயமே மனமாக
மனதினுள்  அன்பாக
அன்பினுள் கருணையாக
கருணையே நெஞ்சமாக
என் இதயத்தை ஆள்கிறாய்

காற்றே நீயாக
நீயே என் மூச்சாக
மூச்சே எண்ணங்களாக
எண்ணங்களே கவிதையாக
என் சிந்தை எல்லாம்  நிற்கிறாய் 


5 comments:

  1. nice ma..
    //மூச்சே எண்ணங்களாக
    எண்ணங்களே கவிதையாக//

    ReplyDelete
  2. நன்றி தமிழ் உங்கள் வருகைக்கு ..

    ReplyDelete
  3. எல்லாமும் நீயாக. அற்புதம்.

    உங்களின் ப்ளாக் பதிவுகளுக்கு நீங்கள் பதிவேற்றியுள்ள படங்கள் என்னை வெகுவாகக் கவர்கின்றன. வித்தியாசமாக உள்ளன. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. உயிரோட்டமான ப்ளாக் இது..

    ReplyDelete
  5. உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி உங்கள் வருகைக்கும் நன்றி ...

    ReplyDelete