நிலத்தினில் மரமாக
மரத்தினில் இலையாக
இலை மறைவில் பூக்களாக
பூவினுள் வண்டாக
என்மனதை குடைகிறாய்
தண்ணீரில் நீரோட்டமாக
நீரோட்டத்தில் சிப்பியாக
சிப்பினுள் முத்தாக
முத்தினுள் ஒளியாக
என் கண்களில் நிற்கிறாய்
நெருப்பினுள் தணலாக
தணலே தேகமாக
தேகமே ஸ்பரிசமாக
ஸ்பரிசமே தீண்டலாக
உடலையே வேள்வியாக்குகிறாய்
ஆகாயமே மனமாக
மனதினுள் அன்பாக
அன்பினுள் கருணையாக
கருணையே நெஞ்சமாக
என் இதயத்தை ஆள்கிறாய்
காற்றே நீயாக
நீயே என் மூச்சாக
மூச்சே எண்ணங்களாக
எண்ணங்களே கவிதையாக

.jpg)

nice ma..
ReplyDelete//மூச்சே எண்ணங்களாக
எண்ணங்களே கவிதையாக//
நன்றி தமிழ் உங்கள் வருகைக்கு ..
ReplyDeleteஎல்லாமும் நீயாக. அற்புதம்.
ReplyDeleteஉங்களின் ப்ளாக் பதிவுகளுக்கு நீங்கள் பதிவேற்றியுள்ள படங்கள் என்னை வெகுவாகக் கவர்கின்றன. வித்தியாசமாக உள்ளன. வாழ்த்துகள்
உயிரோட்டமான ப்ளாக் இது..
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி உங்கள் வருகைக்கும் நன்றி ...
ReplyDelete