Thursday, 1 November 2012

மண(ன)ம் வீசும் மழை



கட்டளைக்கு பணியாத நிலத்தை

கார்மேகம் கொண்டு புரட்டிபோடுகிறது

ஆற்றோரத் தோப்பிலே ஆவரமாய் ஓலமிடும்

காற்றின் துணைகொண்டு வீழ்த்தும் மரங்கள்

வீழும் மரங்களில் ஒடியலையும் சிறு எறும்புக்கூட்டம்

தண்ணீரின் ஓட்டம் கரைகடந்து சேற்றுவெள்ளம் 

சேற்று வெள்ளத்தில் நடனமிடும்

சின்னம் சிறு சிறார்கள் கூட்டம்

அங்குமிங்குமாய் பாம்புகளின் ஓட்டம்

வெள்ளத்தின் ஓட்டத்தோடு சிறுவர்களின் சாட்டம்

மொத்தத்தில் மழை நிலங்களை மட்டுமில்லாது 

மனங்களையும் குளிர்வித்து செல்கிறது  



2 comments:

  1. மழையை மற்றொரு கோணத்தில் வர்ணித்த கவிஞருக்கு நல்வாழ்த்துக்கள் ,மழையில் நனைந்த மாதிரி இருக்கிறது

    ReplyDelete
  2. கவிஞர் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை என்னை கவி எழுத படிப்பித்த படைத்த வழிகாட்டி உண்மையில் கவி ..

    இருந்தாலும் மழை கிராமபுரத்தில் சந்தோஷமும் நகர புறத்தில் சாக்கடையாகவும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது சரிதானே நவநீதன் நன்றி

    ReplyDelete