வாடை காற்றில் குளிராக நிற்கிறாயோ
மேகத்தினுள் மழையாக இருக்கிறாயோ
என் அகத்தினுள் அரூபமாக நிற்கிறாயோ
என் அகந்தையை அகற்றும் கனிவாக இருக்கிறாயோ
அர்த்த ராத்திரியில் தூக்கமாக நிற்கிறாயோ
தூக்கத்தில் கனவாக இருக்கிறாயோ
அலைகடலின் ஆழமாக நிற்கிறாயோ
கடல் அலையின் நுரைகளாக இருக்கிறாயோ
உன்னை காண பூக்களாய் மலர்ந்து நிற்கிறேன்
நீயோ பாலைவனத்தில் மழையாக இருக்கிறாய்
நீ இருந்தும் இல்லாமல் நிற்கிறாய்
நான் உன்னை தொலைத்தும் தொலையாமல் தேடிகொண்டு இருக்கிறேன்


ராஜன்....யார் எங்கேயும் நிற்கட்டும்...ஆனால் நீங்க மட்டும் பெரிய 'ற'னாவுக்கு பக்கத்துல 'க்' னாவ நிற்க வைக்காதீங்க...
ReplyDeleteஹா..ஹ..ஹா நன்றி அகிலா உங்கள் வருகைக்கு ..மிகவும் சந்தோஷம் தவறுகளை சுட்டி காட்டினால் தான் என்னை திருத்திக்கொள்ள முடியும் ..உங்கள் பதிவுகளையும்,கவிதைகளையும் படித்து இருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் உங்கள் தமிழ் புலமையையும் வார்த்தை விளையாட்டுகளையும் கண்டு வியந்து இருக்கிறேன்..நன்றி உங்கள் திருத்தல்களுக்கு ....
Deleteஉன்னை காண பூக்களாய் மலர்ந்து நிற்கிறேன்
ReplyDeleteநீயோ பாலைவனத்தில் மழையாக இருக்கிறாய்
நீ இருந்தும் இல்லாமல் நிற்கிறாய்
நான் உன்னை தொலைத்தும் தொலையாமல் தேடிகொண்டு இருக்கிறேன்
so nice pa
நன்றி தமிழ் இருந்தும் இல்லாமலும் இருக்கிற நிலையை நாயகி ..கொடுத்ததினால் அறிந்தும் அறியாமல் கவிதைகள் வருகின்றன...நன்றி உங்கள் கருத்துகளுக்கு ...
Deleteஇந்தமாதிரி இருந்தும் இல்லாமலும் கற்பனையைக் கொட்டுவது ஒரே ஒரு நண்பர் தான்.அதுவும் நீங்கள் தானா ?கவிதைக்கும் கறபனக்கும் எட்டாத தூரத்தில் சொற்கள் சிலம்பாட்டம் ஆடுகின்றன.மகிழ்ச்சி
ReplyDeleteஇந்தமாதிரி இருந்தும் இல்லாமலும் கற்பனையைக் கொட்டுவது ஒரே ஒரு நண்பர் தான்.அதுவும் நீங்கள் தானா ?கவிதைக்கும் கறபனக்கும் எட்டாத தூரத்தில் சொற்கள் சிலம்பாட்டம் ஆடுகின்றன.மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி நாகை கவின் ..உங்கள் கருத்துக்களுக்கு ..சொற்கள் அமைப்பதில் இன்னும் நான் தேர்ச்சி பெறவில்லை என்று நினைக்கிறன் ....இதுபோல் எழுத எழுத பிறகு சிலம்பாட்டம் ..நிச்சயம் கை கூடும் என்று ..நினைக்கிறன் ....
Deleteமார்கழியில் குளிராக ;இருக்கும் கவிதைகள் கோடையில் கனலாக இருக்காமல் மழையாக இருக்கட்டும் தொலைந்த அன்பு கிடைக்கட்டும் தொடர்கதையாய் காதல் தொடரட்டும்
ReplyDeleteஹ..ஹா.ஹ தேடலிற்கு மார்கழி குளிரும்..கோடையின் கனலும் ஒன்று தானே உங்கள் கருத்து கவிதை போல் உள்ளது நவநீதம் குருக்கள் நன்றி
ReplyDeleteaaha innamum thedi kondu irukkum ungalathu kaadhal vaazhga Bhaskar..:)
ReplyDeleteஅடிகின்ற அலைகளுக்கும் வீசுகின்ற தென்றலுக்கும் சுழ்லுகின்ற பூமிக்கும் ஓயவேது அதுபோல நம் கவிதையின் நாயகனின் தேடலுக்கும் முடிவேது ..நாயகியை தவிர வேறு யார் அறிவார் பராபரமே....நன்றி லல்லி ..உங்கள் கருத்துக்களுக்கு ..
ReplyDelete