Saturday, 22 December 2012

நிழலாய் ஓர்மைகள்




புலர்ந்தும் புலராத காலை பொழுதில் 
உன்னை காண ஓடிவந்த காலங்கள் 
யாவும் மறக்க முடியாமல் கனவுகளில் 
விழிகளில் மட்டும்  ஓர்மையில்

இருள் சூழ்ந்த இரயில் வண்டி கூட 
உன்பகை கொண்டதால் புகை சூழ்ந்து
சிவப்பு விளக்கை எனக்காய் இட்டு 
பச்சை விளக்கோடு பாசமில்லாது போனதே

இடைவெளி இல்லாது ஒலித்த 
அலைபேசி கூட
அன்பே உன்அழைப்பு இல்லாமல்    
அலங்கோலமாகி போனதே 


உணர்வில்லா உறிஞ்சல்களுடன் 
சுவையான காபி கூட
உன் அருகாமை இல்லாது
சுவை இல்லாது போனதே 

நிறைவான வாதங்களுடன் 
அறை முழுவதும் நின்ற விவாதங்கள் யாவும் 
சிறையாகி போனதே எனி அது 
பிறையாகி வளர்வது என்னாளோ 

கடந்த கால நினைவுகள் எல்லாம் 
கல்லறையினுள் தூங்கினாலும் 
கலங்காது வந்து செல்வேன் 
காதல் என்னுள் தூங்காது இருக்கும் வரை 







6 comments:

  1. Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி தமிழ் ..

      Delete
  2. //புலர்ந்தும் புலராத காலை பொழுதில்
    உன்னை காண ஓடிவந்த காலங்கள்
    யாவும் மறக்க முடியாமல் கனவுகளில் //

    //ஓர்மையில் மட்டுமே விழிகளில்// ..................nice pa

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் உங்கள் கருத்துக்களுக்கு ...

      Delete
  3. aaha enna oru arputhamana varigal Bhaskar...
    கடந்த கால நினைவுகள் எல்லாம்
    கல்லறையினுள் தூங்கினாலும்
    கலங்காது வந்து செல்வேன்
    காதல் என்னுள் தூங்காது இருக்கும் வரை...!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி லலிதா ...உங்கள் பாராட்டுக்களுக்கு எனியும் அருமையாக எழுத வேண்டும் ...என்ற உற்சாகம் வருகிறது

      Delete