உன்னை முதன் முதலில் கண்டபோது
உன்னுள்
இருந்தவைகள் எதுவுமே தெரியவில்லை
முதல்
பார்வையில் உன்னை என்னுள் பதியம் போட்டாய்
வேதனைகளை
மறக்கும் வித்தையை கொடுத்தாய்
உயிரின்
வெம்மையை உணரவைத்தாய்
உயர்ந்த
ஒழுக்கத்தை என்னில் விதைத்தாய்
வாழ்வின்
உண்மைகளை வழித்தடமாய் காட்டினாய்
பகலை
இரவாக்கி காட்டினாய்
இரவினை
இல்லாமல் ஆக்கினாய்
மென்மையான
பெண்மையையும்
பெண்மையினுள்
பேராற்லையும் காட்டினாய்
கனிவையும்
காட்டினாய் காளியாகவும் நின்றாய்
புன்னகையிலும்
புரிதல் உண்டு என்று புதுமை காட்டினாய்
கவிபாடவைத்து
கவிஞனாக மாற்றினாய்
உன்
நினைவுகளை என் கனவுகளோடு இணைத்தும் காட்டினாய்
என்
கேள்விகளுக்கு எல்லாம் பதிலாய் நின்றாய்
அருகில்
இருப்பதை விட அகன்று இருப்பதின் வலியை காட்டினாய்
இன்று
காத்திருப்பின் வலியையும் உணரவைத்து
அதை
வெல்லும் வழியை மட்டும் சொல்லாமல்
மறைத்துவிட்டாயே
அன்பே
உன்னை
வெல்ல வழி காட்டு அன்பே....


Excellent!!!!! wish u all the best for more contributions ...
ReplyDeleteRajNarayan
Thanks ..Narayan..
Deletearumaiyaana Kavithai...:)
ReplyDeleteநன்றி தேவதை ..
ReplyDelete//காத்திருப்பின் வலியையும் உணரவைத்து
ReplyDeleteஅதை வெல்லும் வழியை மட்டும் சொல்லாமல்
மறைத்துவிட்டாயே அன்பே // nalla padhivu.
மறைத்து விட்டதோடு இல்லாமல் மறைந்தும் நிற்கிறாய் ...
Deleteஅதனால் தான் அதை வெல்ல வழி கேட்கிறேன் ...
நன்றி தமிழ்...