Friday, 25 January 2013

காதல் ஞானி


நீ தேடும் அமைதி கிடைக்க 
நீ ஞானியாக வேண்டிய அவசியம் இல்லை 
என் நியாயங்களை ஏற்கும் மனது 
இருந்தாலே போதும் 

பிணைப்புகள் இல்லை 
அதனால் பிரிவுகளும் இல்லை 
பிரிவுகள் இருப்பின் 
பிணைப்புகள் அதை விடுவதும் இல்லை 

வீழ்ந்து கிடக்கும் தோரணங்கள் எல்லாம் 
வேர்களாய் எழுந்து நிற்க 
முட்களால் சூழுந்துபோன வசந்த வாசல்களை 
மலர்களால்  அலங்கரிக்க உன் அழைப்பு ஒன்றே போதும் 


Sunday, 6 January 2013

நீ இல்லாத நான்


சலனமே இல்லாமல் அமைதியாய் 
உன் இதயம் உன் அமைதியே 
கொந்தளிப்பில் என் இதயம் 

வாதங்கள் இல்லாது பார்வைகள் 
தொலைத்து சலனமே இல்லாமல் 
உன் இதயம் 

உள்ளத்தின் துடிப்பு கண்களில் 
உணர்வாய் துடித்து
அடங்கும் என் இதயம் 

உணர்வுகள் எல்லாம் வடிந்து 
உயிரற்ற உருவமாய் என் இதயம் 
அதனால் எனி அமைதியுறும் உன் இதயம் 


Friday, 4 January 2013

மனதின் குமுறல்



உன் நினைவுகளால் நான் 
வீழ்ந்து போனாலும் 
உன்னை விட்டுவிலகவில்லை 

நாம் இருந்த இடங்கள் யாவும் 
மறைந்து போனாலும் நீ விட்டு செனற 
தடயங்கள் இன்னும் மறையவில்லை 

எதிர் வாதங்கள் எல்லாம் 
எதிர் மறையானதால்  என் எதிரில்
எதிரியாக கூட நீ இல்லை 

நிஜங்களெல்லாம் ரணமாகி போனதால்  
நினைவுகளால்  கூட அதை 
குணபடுத்த முடியவில்லை

புன்னகை சூழ்ந்த இதழ்கள் இரண்டும் 
மௌனமாகி போனதால் உன்
அழைப்பைகூட அவை உதிர்க்கவில்லை 

பிரிவுகள் நம்மை பிரித்து வைத்தாலும் 
தொலைவுகள் நம்மை 
தொலைத்து விடவில்லை 

மறுப்புகள் எல்லாம் மலை போல் இருந்தாலும் 
மீண்டு வருவதும் மாண்டு போவதும் 
நம் கைகளில்தான் அன்பே